போலீஸ் போல் நடித்து இளம் பெண் பாலியல் வன்புணர்வு.. காவல்துறை விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை.!
போலீஸ் போல் நடித்து இளம் பெண் பாலியல் வன்புணர்வு.. காவல்துறை விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை.!
இந்திய தலைநகர் டெல்லியில் காவல்துறை அதிகாரி போல் நடித்து இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞரை கைது செய்து இருக்கிறது குற்றப்பிரிவு காவல் துறை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டிற்குள் செல்லும்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த ஒரு நபர் தன்னை டெல்லி காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி என அறிமுகப்படுத்தி இருக்கிறார். மேலும் அந்த இளம் பெண்ணும் அவரது காதலரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் அதனை அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் காட்டுவதாகவும் கூறி மிரட்டி இருக்கிறார். மேலும் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்வதாகவும் அந்த பெண்ணை மிரட்டி உள்ளார்.