×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆதார் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த சுப்ரீம் கோர்ட்!! அதிரடி தீர்ப்பு!!

Aadhar case judgement

Advertisement

அரசின் அனைத்து சேவைகளுக்கும் மற்றும் சில தனியார் சேவைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

வங்கிச் சேவை, பான் கார்டு, செல்போன் சேவை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்கியுள்ளது.

ஆதாரை அரசின் பல்வேறு திட்டப்பணிகளுக்காக பயன்படுத்துவது மக்கள் மத்தியில் புகார்களைக் கிளப்பியது. தனி ஒரு குடிமகனின் கைரேகை, கண் விழித்திரை தகவல்கள் உள்ளிட்டவை அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு கட்டாயம் அல்ல என்றும் இதன் மூலம் தகவல் திருடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து அரசின் இந்த உத்தரவை எதிர்த்து 27 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இது குறித்த வழக்குகளை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி புட்டசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது அனைத்துத் துறைகளிலும் பொருளாதார, சமூக வளர்ச்சியில் மக்கள் நலத்திட்டப்பணிகளை நிறைவேற்றுவதற்கு, ஆதார் எந்த வகையில் மக்களுக்கு உதவுகிறது என ஆய்வு செய்தது.

இந்த அனைத்து மனுக்களையும் ஒன்றாக விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி ஒரே தீர்ப்பை அளித்து உள்ளனர். இந்த தீர்ப்பின்படி அரசு சேவைகளை பெற ஆதார் கட்டாயமாகிறது. ஆனால் தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரம் கேட்பது சட்ட விரோதம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் விவரத்தை மக்கள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும் ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு நீக்கப்பட்டது. இதனால் இனி தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரத்தை கோர முடியாது. இதன் காரணமாக இனி மொபைல் நிறுவனங்கள், சிம் கார்ட் நிறுவனங்கள் என யாரும் ஆதார் விவரங்களை கேட்க முடியாது. கட்டாயம் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்று கோர முடியாது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Aaadhar case judgement #supreme court about aadhar
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story