அபிநந்தன் பாகிஸ்தானில் விழுந்ததும் முதலில் இதைத்தான் செய்தாரா? வெளியான தகவல்கள்!
Abindhan tried to destroy all vitness
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய CRPF வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதி ஒருவன் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 க்கு மேற்பட்ட CRPF வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவம் நாடும் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பத்துக்கு பதிலடித்தரும் வகையில் பாகிஸ்தான் எல்லையில் இருந்த 300 க்கு மேற்பட்ட தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியது இந்திய விமான படை.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தது. அந்த விமானங்களை விரட்டி சென்று தாக்குதல் நடத்தியது இந்திய போர் விமானங்கள். விரட்டி சென்ற விமானங்களில் இருந்த வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த அபிநந்தனும் ஒருவர்.
ஆனால் எதிர்பாராத விதமாக அபிநந்தன் சென்ற விமானம் எதிரிகளால் சுடப்பட்டது. இதானால் பேராஷூட் மூலம் தரையிறங்க முயற்சித்த அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்கிவிட்டார். தான் பாகிஸ்தான் எல்லைக்குள் இருப்பதை உணர்ந்த அபிநந்தன் முதல் வேலையாக தன்னிடம் இருந்த ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்துள்ளார் அபிநந்தன்.
தன்னிடம் இருந்த பிளான், வந்த பாதை இப்படி அனைத்து ஆதாரங்ளையும் அபிநந்தன் விழுங்க முயற்சி செய்ததாகவும், அருகில் இருந்த குளத்தில் குதித்து தன்னிடம் இருந்த விவரங்களை அவர் அழிக்க முயற்சி செய்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.