7 பேர் உயிரை பறித்தது ஒரு தண்ணீர் பாட்டிலா?? வைரலாகும் பதிவு.. உண்மை என்ன?? ஓட்டுனர்கள் ரொம்ப உஷாரா இருங்கள்.!
இரண்டு தினங்களுக்கு முன்பு பெங்களூரு கோரமங்களாவில் நடந்த கொடூர விபத்தில் சொகுசு கார் ஒன்று
இரண்டு தினங்களுக்கு முன்பு பெங்களூரு கோரமங்களாவில் நடந்த கொடூர விபத்தில் சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத் தடுப்புகளிலும் கட்டடம் ஒன்றை இடித்து நின்றதில் காரில் பயணித்த 7 பேர் பலியாகினர்.
அங்கு நடந்த விபத்து குறித்து போலீசார் கூறுகையில், இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் மட்டும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
காரில் சென்றவர்கள் சீட் பெல்ட் அணியாததே உயிரிழப்புக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். அதேநேரம் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் விபத்து நடந்த அந்தக் காரை போலீசார் ஆய்வு செய்தபோது, பிரேக் பெடல் பகுதியில் ஒரு தண்ணீர் பாட்டில் கிடைத்ததாகவும், அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றபோது அந்த தண்ணீர் பாட்டில் கீழே விழுந்து பிரேக் பெடலுக்குள் சென்று சிக்கி இருக்கலாம் என்றும், இதனால் கார் பிரேக் பிடிக்க முடியாமல் கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிப்பதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
ஆனால் விபத்துக்கு உண்மையிலையே அதுதான் காரணமாக என்பது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் ஓட்டுனர்கள் காரை எடுக்கும் முன் தங்கள் காரை சரிபார்ப்பதும், இதுபோன்ற சிக்கல்களில் இருந்து தப்பிக்கவும் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுக்காக இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது.