உயிரிழந்த காட்டுப்புலியை காலால் மிதித்து வீடியோ வெளியிட்ட மக்கள்.. இதுதான் ஒரு தேசிய விலங்கை நடத்தும் விதமா?.. பிரபல நடிகர் வருத்தம்..!!
உயிரிழந்த காட்டுப்புலியை காலால் மிதித்து வீடியோ வெளியிட்ட மக்கள்.. இதுதான் ஒரு தேசிய விலங்கை நடத்தும் விதமா?.. பிரபல நடிகர் வருத்தம்..!!
பீகார் மாநிலம் சம்பரான் மாவட்டத்தில் பகஹா கிராமத்தில் மக்களை ஆட்கொல்லி புலி வாட்டி வதைத்தது. இதனால் 9 பெரை கொன்ற ஆட்கொல்லி புலியை நேற்று வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
அதன் பின்னர் புலியை பார்க்க குவிந்த அப்பகுதி மக்கள், அதன்மீது ஏறி மிதித்தும், அதன் மீசையை பிடித்து இழுத்தும் சிரித்துக்கொண்டிருந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதனை கண்ட பிரபல பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹுடா வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்த அவர், "இதுதான் ஒரு தேசிய விலங்கை நடத்தும் விதமா?" என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.