இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண்.! என்ன வழக்கு தெரியுமா.?
இந்தியா சுதந்திரம் பெற்ற பின், பெண் குற்றவாளி ஒருவர், முதல் முறையாக தூக்கிலிடப்பட உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஷப்னம் - சலீம் ஆகியோர் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு ஷப்னம் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 2008ஆம் ஆண்டு ஷப்னம் வீட்டில் உள்ள அவரது பெற்றோர் உட்பட ஏழு பேரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
அதற்கு அவரது காதலர் சலீம் உதவியாக இருந்தார். இதனைடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவருக்கும் மாவட்ட நீதிமன்றம் மரண தண்டை விதித்தது. இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது. அவரது கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார்.
இதனையடுத்து ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்தியாவிலேயே பெண்களை தூக்கிலிடும் அறை ஒரே ஒரு இடத்தில்தான் உள்ளது. ஆனால், சுதந்திர இந்தியாவில் அந்த அறை இதுவரை பயன்படுத்தப்பட்டதே இல்லை. அது மதுரா சிறையில் 1870-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.
இந்நிலையில் மதுராவில் ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அதற்காக அந்த அறை தற்போது திறக்கப்பட்டுள்ளது. தண்டனை நிறைவேற்றப்பட்டால், சுதந்திரத்துக்கு பின், தூக்கிலிடப்பட்ட முதல் பெண் குற்றவாளியாக ஷப்னம் இருப்பார்.