ஓடும் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு!. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 114 பயணிகள்!. மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஏர் இந்தியா!
ஓடும் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு!. மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஏர் இந்தியா! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 114 பயணிகள்!.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு, தினந்தோறும் ஏர் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவு, 12 மணிக்கு திருச்சிக்கு வரும் இந்த விமானம், அதிகாலை 1 மணிக்கு, துபாய்க்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.
நேற்று இரவு வழக்கம் போல துபாய்க்கு புறப்பட தயாரான விமானம் 114 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. விமானமானது ஓடுதளபாதையை விட்டு மேலெழும்புவதற்கு முன்னரே விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
இதையடுத்து, பயணத்தை ரத்து செய்த விமானி, விமானத்தை அவசர அவசரமாக நிறுத்தினார். இதனால் விமானத்தில் இருந்த 114 பயணிகள் உயிர் தப்பினர்.
கடந்த வாரம் மும்பையில் விமானத்தில் இருந்து தவறி விழுந்த பணிப்பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டர். மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான AI 864 விமானம் 53 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது.
அப்போது விமானத்தின் கதவை மூடுவதற்காக பணிப்பெண் சென்றுள்ளார். அப்போது விமானத்தில் இருந்து திடீரென தவறி விழுந்த அவர், படுகாயங்களுடன் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார்.
அதேபோல் கடந்த வாரம் திருச்சியிலிருந்து துபாய் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கட்டுப்பாட்டு டவர் மீது மோதி நிலை தடுமாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு 130 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்குவதால் பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.