இரயில் முன் பாய்ந்து தலை துண்டாகி தொழிலதிபர் தற்கொலை.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ vairal..! அதிர்ச்சி சம்பவம்.!
இரயில் முன் பாய்ந்து தலை துண்டாகி தொழிலதிபர் தற்கொலை.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ vairal..! அதிர்ச்சி சம்பவம்.!
என்னை மன்னித்துவிடுங்கள் என கடிதம் எழுதி தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்ட சோகம் ஆக்ராவில் பயணிகள் முன்பு நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா, ராஜா மண்டி இரயில் நிலையத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை வருகை தந்த இளைஞர், நடைமேடை 1ல் வந்த கதிமான் விரைவு இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் பதறிப்போயினர். இரயில் சக்கரம் ஏறியதில் தலை துண்டாகி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஆக்ரா இரயில்வே காவல் துறையினர், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஜவுளிக்கடை தொழிலதிபரான ஹரிஷ் தேவனானிக்கு, மனைவி மற்றும் ஆண்-பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
அங்குள்ள கமலா நகரில் ஜவுளிக்கடையும் அவருக்கு சொந்தமாக இருக்கும் சூழலில், கடந்த சில நாட்களாகவே ஹரிஷ் மன உளைச்சலில் இருந்துள்ளார். யாரிடமும் பேசாமல் கவலையில் ஆழ்ந்துள்ளார். இதற்கிடையில் தான் சம்பவத்தன்று இரயில் நிலையத்திற்கு வந்து, அதற்கு முன்புறம் உள்ள கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு தற்கொலை செய்துள்ளார் என்பது அம்பலமானது.
இவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பதற்கான முழு காரணம் தெரியவில்லை என்றாலும், அவரின் தற்கொலை கடிதத்தில் "என்னை மன்னித்துவிடுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் தொடர் விசாரணை நடந்து வருகிறது.