சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த விமான பணிப்பெண் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக துப்புரவு தொழிலாளி ஒருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரூபால் ஓக்ரே 25 வயதான இவர் தனது சகோதரி மற்றும் அவரது ஆண் நண்பருடன் மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்து ஏர் இந்தியா விமானத்தில் பயிற்சி பணி பெண்ணாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது சகோதரியும் ஆண் நண்பரும் சொந்த ஊருக்கு திரும்பினர். மும்பையில் தனியாக இருந்த ரூபாலை அவரது பெற்றோர் செல்போன் மூலமாக தொடர்பு கொண்ட போது அவர் போன் எடுக்கவில்லை. சாவித்துவேன்இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மும்பையில் இருந்த நண்பர் ஒருவரின் மூலம் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துவர கூறியுள்ளனர்.
அந்த நண்பர் இவரது வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார் ரூபால். இதனைத் தொடர்ந்து அவரது சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது விக்ரம் அத்வால் என்ற 40 வயதுடைய துப்புரவு தொழிலாளி கடைசியாக ரூபால் வீட்டிற்கு சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்திய போது ரூபாலுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கழுத்தறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் கொலைக்கான காரணம் என்ன என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.