ஊழியர்கள் கண்ணியக்குறைவான உடைகள், ஜீன்ஸ், டி-சர்ட் அணிய தடை! ஏர் இந்தியா
air india control dress code
பணிபுரியும்போது சுகாதாரமற்ற உடைகளை உடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பணி நேரத்தில் அலுவலகங்களில் டீ சர்ட் மற்றும் ஜீன்ஸ் போன்ற உடைகளை உடுத்தக் கூடாது என ஏர் இந்தியா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கண்ணியக்குறைவான உடைகள், கிழிந்த உடைகளை தவிர்க்குமாறு ஏர் இந்தியா நிறுவனம் தனது பணியாளர்களை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.
அதில், அனைத்து பணியாளர்களும் தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும். உடைகளை துவைத்து, சுத்தமாக உடுத்த வேண்டும். இந்த விதிகளை மீறினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஏர் இந்தியா எச்சரித்துள்ளது.