கேரளா விமான விபத்து: விமானி மரணம்.. விமானியின் புகைப்படம் வெளியானது..! மேலும் பல தகவல்கள்..!
Air India Express flight crash captain photos
துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கீழே விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்தத்தில் தற்போதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானத்தை ஓடிய விமானி தொடக்கத்திலையே உயிரிழந்தநிலையில் துணை விமானியும் தற்போது உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டில் சிக்கியிருந்தவர்களை இந்தியாவிற்கு அழைத்துவரும் பணியை இந்த விமானம் மேற்கொண்டபோது இந்த விபத்து நடந்துள்ளது.
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் விமான ஓடுபாதையில் ஏற்பட்ட சிக்கலால் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி கீழே விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளது. தற்போதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளநிலையில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்துவருகிறது.
இந்த விமானத்தை இயக்கிய விமானிகளில் ஒருவரான விங் கமாண்டர் தீபக் வசந்த் சாத்தே அவர்களின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. விங் கமாண்டர் சாத்தே முன்னாள் இந்திய விமானப்படை விமானி ஆவார், அவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்குச் ஓட்டுவதற்கு முன்பு ஏர் இந்தியாவுக்கான விமானங்களை ஓட்டியவர். மேலும் அவர் சிறந்த விமானி என்ற விருது பெற்ற விமானி என்பதும் குறிப்பிடத்தக்கது.