அவசரமாக வந்த ஆம்புலன்ஸ்.. பேக் டோரை திறந்த அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி காட்சி.. ட்ரைவர் எஸ்கேப்..!!
அவசரமாக வந்த ஆம்புலன்ஸ்.. பேக் டோரை திறந்த அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி காட்சி.. ட்ரைவர் எஸ்கேப்..!!
அவசர ஊர்தியில் அவசரமாக செல்வது போல நடித்து, கள்ளச்சாராயம் கடத்திய கும்பலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு தடை அமலில் உள்ள நிலையில், அங்கு மதுபானம் அருந்துவது, கடத்துவது போன்ற செயல்கள் குற்ற தண்டனைக்கு வழிவகை செய்யும். ஆனால், மதுவிலக்கு தடையையும் மீறி கள்ளச்சாராய விற்பனை, கடத்தல் மதுபான விற்பனை போன்றவை நடந்து வருகிறது. அதனை ஒடுக்க சிறப்பு காவல் துறையினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகரில் இருந்து, பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவுக்கு மதுபானம் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த அவசர ஊர்தி மற்றும் காரை நிறுத்தி சோதனை செய்கையில், இரண்டு வாகனத்திலும் கள்ளச்சாராயம் கேன்களில் அடைக்கப்பட்டு கடத்தப்பட்டது அம்பலமானது. கார் ஓட்டுனரை அதிகாரிகள் கைது செய்த நிலையில், அவசர ஊர்தி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
மொத்தமாக அவசர ஊர்தியில் 100 கள்ளச்சாராய கேன்கள், காரில் 15 கேன்கள் என 115 கள்ளச்சாராய கேன்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்த காவல் துறையினர், தலைமறைவான அவசர ஊர்தி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.