சூப்பர் சைக்லோனாக மாறியது Amphan புயல்..! இந்த 5 மாநிலங்களில் மே 21 வரை கனமழைக்கு வாய்ப்பு..!
Amphan cyclone latest updates
Amphan புயல் காரணமாக 5 மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, வங்கக்கடலில் உயர் உச்ச புயலாக இருந்த Amphan புயலானது தற்போது சூப்பர் சைக்லோன் என அழைக்கப்படும் மிக கடும் புயலாக மாறியுள்ளது. ஒடிஷா மற்றும் மேற்கு வங்கம் இடையே இந்த புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மீனவர்கள் வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புயலால் ஒடிஷா, மேற்குவங்கம், சிக்கிம், அசாம், மேகாலயா உள்ளிட்ட 5 மாநிலங்களில் மே 21 வரை கடும்மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே Amphan புயல் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.