"கொரோனா காதல்..." 3 கொலையில் முடிந்த கொடூரம்... கைக்குழந்தையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த கணவர்.!
கொரோனா காதல்... 3 கொலையில் முடிந்த கொடூரம்... கைக்குழந்தையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த கணவர்.!
அசாம் மாநிலத்தைச் சார்ந்த பொறியாளர் தனது மனைவி மற்றும் அவரது பெற்றோரை கொலை செய்துவிட்டு ஒன்பது மாத கைக்குழந்தையுடன் காவல் துறையிடம் சரணடைந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
அசாம் மாநிலம் கோலாகட் மாவட்டத்தைச் சேர்ந்த நஜீப் ரஹ்மான் என்ற நபருக்கு 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பேஸ்புக் மூலம் அறிமுகமானவர் சங்கமித்ரா. பழகிய சிறிது நாட்களிலேயே இருவரும் காதலிக்க தொடங்கினர். இதனைத் தொடர்ந்து 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சங்கமித்ராவின் பெற்றோர் அவரை தங்களுடன் அழைத்துச் சென்றனர். சங்கமித்ராவின் மீது திருட்டு பலி மத்திய வரை சிறையிலும் அடைத்தனர்.