×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொடரும் தற்கொலைகள்.. உடனடியாக அதை தடைசெய்ய வேண்டும்.! அதிரடியாக ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கும் அன்புமணி ராமதாஸ்.!

தொடரும் தற்கொலைகள்.. உடனடியாக தடைசெய்ய வேண்டும்.! அதிரடியாக ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கும் அன்புமணி ராமதாஸ்!!

Advertisement

ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், இளைஞர்கள் பலரும் அதற்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு செல்கின்றனர். அண்மையில் கூட திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற கல்லூரி மாணவர் ஆன்லைனில் ரம்மி விளையாடி ஏராளமான பணத்தை இழந்த நிலையில் மனமுடைந்து திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு முந்தைய ஆட்சியில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட பிறகு, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் செய்து கொல்லப்பட்ட 29-ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த 6 ஆண்டுகளில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான பா.ம.க.வின் தொடர் போராட்டம் காரணமாக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கடந்த மாதம் 26-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. ஆளுனரும் உடனடியாக அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தால், இந்த தற்கொலையை தடுத்திருக்கலாம்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னொருவர் உயிரிழந்தால் அதற்கு ஆளுனர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு வாரத்திற்கு முன்பே நான் கூறியிருந்தேன். அதை ஆளுனர் மாளிகை பொருட்படுத்தாதது தான் இன்னொரு இளைஞரின் உயிரிழப்புக்கு காரணமாகியிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனியும் எவரும் உயிரிழக்கக் கூடாது. அதை கருத்தில் கொண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#அன்புமணி ராமதாஸ் #Online Rummy #suicide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story