8 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியரை கம்பத்தில் கட்டிவைத்து உதைத்த பெற்றோர்.!
8 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியரை கம்பத்தில் கட்டிவைத்து உதைத்த பெற்றோர்.!

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு, கம்பத்தில் கட்டி வைத்து பாடம் எடுக்கப்பட்டது.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனக்காப்பள்ளி, வட்டடி கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 12 வயதுடைய மாணவி, எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதையும் படிங்க: மிளகாய்பொடி தூவி ரசித்த கொடுமை.. தாயின் கள்ளக்காதலனால் பிஞ்சுகளுக்கு நேர்ந்த விபரீதம்.!
இவர் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு பெற்றோர் கடும் ஆத்திரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஆசிரியருக்கு தர்ம அடி
பின் நேற்று ஆவேசத்துடன் பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற பெற்றோர், ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்து, மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர். காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ஆசிரியரை மீட்டு காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: "அம்மா கல்யாணம் வேண்டாம் மா" - சொல்லியும் கேட்காத பெற்றோர்.. விபரீத முடிவெடுத்த மகள்.!