திருப்பதி மலைப்பாதையில் ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி ஆபத்து பயணம்; 6 இளைஞர்கள் கைது., கார் பறிமுதல்.!
திருப்பதி மலைப்பாதையில் ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி ஆபத்து பயணம்; 6 இளைஞர்கள் கைது., கார் பறிமுதல்.!
மலைப்பாதையில் கவனமாக செல்லாத பட்சத்தில், அது நமது உயிருக்கும், பிறரின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
திருப்பதி மலைக்கோவில்
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி, ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவெங்கும் உள்ள பக்தர்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். ஏழு மலைகளுக்கு மேலே அமைந்துள்ள கோவிலுக்குச் செல்ல மலையேற்ற நடைபயணம், சாலைவழிப் போக்குவரத்து உதவி செய்கிறது.
இதையும் படிங்க: சாலையோர மரத்தில் மோதி துயரம்; 3 பேர் பரிதாப பலி.. அப்பளமாக நொறுங்கிய கார்.!
ஆபத்தை விளைவிக்கும் செயல்
திருப்பதி மலைக்கு பயணம் செய்யும் வாகனங்களுக்கு என கட்டுப்பாடுகள் இருக்கின்றன. தேவையின்றி அதிவேகத்தில் வாகனத்தை இயக்குதல், வாகனத்தில் ரீல்ஸ் எடுத்தபடி பயணம் செய்தல் போன்றவை அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான செயல்கள் பிற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இளைஞர்களுக்கு காப்பு
இதனிடையே, கார் ஒன்றில் பயணம் செய்த இளைஞர்கள் குழு, ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி காரில் இருந்து வெளியே எட்டிப்பார்த்து அதகளம் செய்து பயணம் மேற்கொண்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகவே, காவல் துறையினர் 6 இளைஞர்களின் மீது புகார் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களின் கார், செல்போன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. கடித்து குதறிய தெரு நாய்கள்.!! 14 மாத குழந்தை பலி.!!