உயிருக்கு உயிராக காதல்.. காதலி கைவிட்டதால் இளைஞர் தற்கொலை.!
உயிருக்கு உயிராக காதல்.. காதலி கைவிட்டதால் இளைஞர் தற்கொலை.!
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி, கோபிசெட்டிவாரிபள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சங்கர் ராவ். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியுடன் விவாகரத்து நடந்துள்ளது. மற்றொரு இளம்பெண்ணுடன் காதல் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார். கடந்த 2 வருடமாக காதல் நீடித்த நிலையில், சங்கர் ராவிடம் இருந்து பெண்மணி பணம் மற்றும் நகைகள் போன்றவற்றை வாங்கியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே பெண் சங்கர் ராவுடன் பேசுவதை தவிர்த்து வந்த நிலையில், உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றும் பெண்மணி தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்துபோன சங்கர் ராவ், தனது நண்பர்களை வாட்சப் குழுவில் இணைத்து விபரத்தை தெரிவித்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரின் வீட்டிற்கு செல்வதற்குள் உயிர் பிரிந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சங்கர் ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.