#FireAccident: இரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து., ஆசிட் கசிவு.. 6 பேர் பலி., 13 பேர் மரணம்.. இழப்பீடு அறிவித்த அரசு.!
#FireAccident: இரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து., ஆசிட் கசிவு.. 6 பேர் பலி., 13 பேர் மரணம்.. இழப்பீடு அறிவித்த அரசு.!
இரசாயன ஆலையில் தீவிபத்து ஏற்பட்டு 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள எலுரு மாவட்டம், அக்கிரெட்டிகுடேம் கிராமத்தில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இந்த நிலையில், திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டு நைட்ரிக் ஆசிட் மற்றும் மோனோமீத்தையில் வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த பணியாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், நிகழ்விடத்திற்கு அருகே இருந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 13 தொழிலாளர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில், தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு & மீட்பு படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். விபத்து குறித்த விசாரணை நடந்து வருகிறது.