தாய்மாமனுடன் 15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்.. படிப்பை எண்ணி வருந்தி, சிறுமி தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!
தாய்மாமனுடன் 15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்.. படிப்பை எண்ணி வருந்தி, சிறுமி தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!
பள்ளியில் படித்த சிறுமிக்கு பெற்றோர்கள் கட்டாய திருமணம் செய்து வைத்த நிலையில், வாழ்க்கையின் மீது விரக்தி கொண்ட சிறுமி, படிப்பை தொடர இயலாமல் மனதிற்குள் புழுங்கி இறுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நகரி, வரதய்யபாளையம் கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சூளூர்பேட் பகுதியில் சிறுமியின் தாய்மாமாவான 30 வயது வாலிபர் வசித்து வருகிறார்.
சிறுமிக்கும் - அவரின் தாய்மாமாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த பெற்றோர், சிறுமியின் விருப்பத்தை மீறி திருமணம் செய்து வைத்துள்ளனர். மேலும், திருமண பேச்சு எடுத்தபோதே, சிறுமி நான் படிக்க விரும்புகிறேன். எனக்கு திருமணம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் கேட்காத காரணத்தால் தனது பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், காவல் நிலையம் என சிறுமி புகார் அளித்தும் பலனில்லை. சிறுமியின் எதிர்ப்பை மீறியும் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி கட்டாய திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
தாய்மாமனுடன் குடித்தனம் நடத்த இயலாது என்று சில நாட்களிலேயே தாய் வீட்டிற்கு வந்த சிறுமி, வழக்கம்போல பள்ளிக்கு சென்று படித்து வந்துள்ளார். சிறுமியை மீண்டும் கணவரின் வீட்டிற்கு செல்லக்கூறி பெற்றோர் வற்புறுத்தி வந்துள்ளனர்.
இதனால் வாழ்க்கையின் மீது விரக்தியடைந்த சிறுமி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த வரதய்யபாளையம் காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.