நாடே அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரத்தால் துயரம்.. சிறுமி 5 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!
நாடே அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரத்தால் துயரம்.. சிறுமி 5 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, அடுக்குமாடி குடியிருப்பின் 5 ஆவது மாடியில் இருந்து தற்கொலை செய்து உயிரை மாய்த்த பரிதாபம் நடந்துள்ளது.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயவாடா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சிறுமி, கடந்த சனிக்கிழமை 5 ஆவது தளத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுமி தற்கொலை செய்துகொண்டார் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சிறுமி வீட்டில் எழுதி வாய்த்த கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில், "அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் வினோத் ஜெயின் என்பவரால் நான் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டேன்.
அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். வினோத் ஜெயினை மன்னிக்க கூடாது" என்று கூறியுள்ளார். இதனால் சிறுமியின் தற்கொலை வழக்கை, பாலியல் பலாத்காரம் மற்றும் போக்ஸோ வழக்காக மாற்றிய அதிகாரிகள், வினோத் ஜெயினை தேடியுள்ளனர்.
சிறுமியின் தற்கொலை விவகாரத்தை அறிந்துகொண்ட வினோத் ஜெயின் தலைமறைவாகவே, அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும், வினோத் ஜெயின் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் பிரதானமாக இருக்கும் கட்சியில் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் 37 ஆவது வார்டில் கவுன்சிலராகவும் களம்கண்டு இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.