அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
Anil Ambani Ericsson Case
எரிக்சன் நிறுவனத்திடம் பெற்ற தொகையை திரும்பிச் செலுத்தாத ரிலையன்ஸ் குரூப் தலைவர் அனில் அம்பானியை உச்சநீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு சாதனங்கள் வாங்குவதற்காக எரிக்சன் நிறுவனத்திடம் இருந்து கடன் பெறப்பட்டுள்ளது. ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ரிலையன்ஸ் குரூப் ஏமாற்றி வந்ததாக அவர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதில் தற்போது தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ. 550 கோடி திருப்பி செலுத்தாத வழக்கில் அனில் அம்பானி உட்பட 3 பேர் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.
இதோடு எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.453 கோடியை 4 வாரத்தில் தர வேண்டும் எனவும், அப்படி தராவிட்டால் அனில் அம்பானி 3 மாதம் சிறை செல்ல நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.