வீடியோ: பதறியடித்து ஓடும் தாய் கரடி!! குட்டி கரடிகள் செய்யும் சேட்டையை பாருங்க! மில்லியன் பேரை வியக்க வைத்த தாய் பாசம்..
பதறியடித்து ஓடும் தாய் கரடி.. ஆபத்து தெரியாமல் தாயிடம் குறும்பு தனம் செய்யும் குட்டிகள்! மில்லியன் பேரை வியக்க வைத்த தாய் பாசம்....
சாலையை கடப்பதற்காக தனது குட்டிகளை வைத்துக்கொண்டு தாய் கரடி படும் பாடு இணையத்தில் தற்போது வைரலாகிவருகிறது.
சமூக வலைதளங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளை குறித்த ஏராளமான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். சில வீடியோக்கள் சிரிக்க வைப்பதுடன், சில வீடியோக்கள் ஆச்சர்யபட வைப்பதாகவும் இருக்கும்.
அந்த வகையில், பார்க்கவே நகைச்சுவையாகவும், அதேநேரம் சிந்திக்கவைக்கக்கூடிய ஒன்றாகவும் உள்ளது இந்த வீடியோ. குறிப்பிட்ட வீடியோவில், தாய் கரடி ஒன்று சாலை ஓரம் நிற்கும் தனது மூன்று குட்டிகளை சாலையின் மறுபுறம் அழைத்துச்செல்ல முயற்சிக்கிறது.
முதலில் ஒவ்வொன்றாக தனது வாயில் கவ்விக்கொண்டு மறுபுறம் கொண்டுசென்ற விட, தாய் கரடி பின்னாலையே அந்த குட்டி மீண்டும் வருகிறது. பார்க்கவே வேடிக்கையாக இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி.