அதிரவைத்த ஆந்திரா, நேற்று மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?
Anthira yesterdays corona states
உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் கொரோனா பரிசோதனையை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரையில் மில்லியன் கணக்கான பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. நேற்று மட்டும் 70,584 பரிசோதனைகள் செய்ததில் 10,093 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.