ஏ. ஆர். ரகுமான் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு பாடல்! ஷேர் செய்தால் எவ்வளவு தெரியுமா? ஸ்பெஷல் ஏற்பாடு!
A.R. rahman post corona awarness video
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளிலும் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொடூர வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளும் தத்தளித்து வருகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகளவில் பரவிவருகிறது. இந்நிலையில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 17வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தினக்கூலி தொழிலாளர்கள் பலரும் வறுமையில் வாடி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் பல பிரபலங்களும், தனி நபர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் புதிய முயற்சியாக ஏ.ஆர். ரஹ்மான் கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ப்ரஸூன் ஜோஷி எழுத, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் கத்திஜா ரஹ்மான். சிவமணி, ஷ்ருதி ஹாசன், ஜோனிட்டா காந்தி, மிகா சிங், ஷாஷா திருப்பதி, மோஹித் சௌஹான், ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், ஹர்ஸ்தீப் கௌர், மோஹினி தேய், அசத் ஹான், நீத்தி மோகன், அபேய் ஜோத்கபூர் போன்ற பல பிரபல பின்னணிப் பாடகர்களும் பாடியுள்ளனர். hdfc வங்கி இந்த பாடலை தயாரித்துள்ளது. மேலும் இந்த பாடலை ஷேர் செய்தால் ஒவ்வொரு ஷேருக்கும் ரூபாய் 500 பிரதமரின் கொரோனா நிதிக்கு செல்லுமாறு hdfctஏற்பாடு செய்துள்ளது.
சேர்ந்தே மீள்வோம் என்ற பொருள்படும் இந்த பாடல் குறித்து ஏ. ஆர். ரஹ்மான், ஒரு நல்ல காரியத்திற்காக இந்த பாடல் எங்கள் அனைவரையும் இணைத்துள்ளது. அதே போன்று இந்த தேசமும் ஒன்றிணைய இந்த பாடல் உத்வேகம் தரும்” என்று பதிவிட்டுள்ளார்.