இதுவரை இல்லாத அளவிற்கு உயிரிழப்பு.! இந்தியாவுக்காக பிரார்த்தனை.! இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த பதிவு.!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று கொஞ்சம்
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. இந்தியாவில் அதிகப்படியானோர் கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவாக 2,812 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 19 ஆயிரத்து 272 ஆக உள்ளது.
உலகிலேயே அதிக அளவில் கொரோனா பாதித்த நாடாக உள்ள இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா மற்ற நாடுகளிடம் உதவி கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பலரும் ’இந்தியாவுக்காக பிரார்த்திப்போம்’ என்று பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், ‘’இந்தியாவுக்காக பிரார்த்தனைகள்’’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.