கொரோனா உறுதி செய்யபட்டதால், 31 வயது ராணுவ வீரர் எடுத்த விபரீத முடிவு!
Army man commits suicide for confirm corono
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. மேலும் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
டெல்லி தவுலா குவானில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் ஆர்ஆர் மருத்துவமனையில் நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர் 31 வயது ராணுவ வீரர். இவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். இவரது குடும்பம் இராஜஸ்தானில் ஆல்வாரில் வசித்து வருகிறது. இந்நிலையில் அவருக்கு சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவருக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொரோனாநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த ராணுவ வீரர் மருத்துவமனையின் முன்புள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர், அவர் உடல்நலம் குறித்த மன உளைச்சலில் காணப்பட்டதாகவும், அதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.