என்னது! இனி இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாதா!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அசாம்!
Asam
அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் இனி இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடையாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன் படி வரும் 2021 ஆம் ஆண்டு அரசு வேலை வேண்டும் என விரும்புவர்கள் கட்டாயம் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என கூறியுள்ளது. மேலும் வீடு இல்லாத பழங்குடியினருக்கு வீடு கட்டி தருவது.
மேலும் நிலமற்றவர்களுக்கு 43,200 சதுரஅடி நிலமும் வழங்கப்படும் என்ற புதிய கொள்கையையும் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி பேருந்து கட்டணம் 25 சதவீதமாக அதிகரித்தும், விதவைகளுக்கு மாதம் 300 ரூபாய் வழங்குதல் போன்ற முக்கிய திட்டத்தை வகுத்துள்ளது.