வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர்.!
வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர்.!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த கொலாப் உசைன் என்ற 20 வயது இளைஞர் ஒரு வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி மாதத்தில் எர்ணாகுளம் பகுதியில் அமைந்துள்ள தன்னுடைய சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு வீட்டு வேலைக்கு ஒரு 16 வயது சிறுமி வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து செல்போனில் ஆபாசமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு இருக்கின்றனர்.
அதன் பின் அந்த சிறுமியிடம் இந்த போட்டோவை உன்னுடைய வீட்டில் காண்பித்து விடுவேன் என்று மிரட்டில் சிறுமியுடன் பாலியல் உறவு வைத்துள்ளார். அந்த இளைஞரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என்று எண்ணிய சிறுமி தனது வீட்டினரிடம் இது பற்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: "எங்க லவ்வை பிரிக்கிறியா.?" காதலியின் தாயை கீழே தள்ளி அலறி அடிக்க அரங்கேறிய கொடூரம்.!
உடனே இது போலீசுக்கு சென்றது. அந்த தகவலின் பெயரில் காவல்துறையினர் உசேனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: பூனைக்காக உயிரையே கொடுத்த பெண்மணி.! 3 நாட்கள் பிணத்துடன் இருந்த சம்பவம்.!