வீரத்தமிழன் அபிநந்தனுக்கு நாளை சுதந்திரதின விழாவில் விருது!
Award for Abinanthan
கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் எப் 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானுக்கு ராணுவத்தின் 3வது உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன், பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட சூழலிலும் தைரியமாக இருந்தார். அந்நாட்டு அதிகாரிகள் எவ்வளவு முயற்சித்தும், ராணுவ ரகசியங்கள் எதையும் கூறாமல் கெத்தாக தாயகம் வந்தார்.
அதே மாதத்தில் பாக்கிஸ்தான் எல்லைக்குள் சென்று பாலகோட்டில் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.
டில்லியில் நாளை நடக்கும் நாட்டின் 73 வது சுதந்திர தின விழாவில் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதும், பாலகோட் தாக்குதலை தலைமை தாங்கி நடத்திய இந்திய விமானப்படை குழு தலைவர் மின்டி அகர்வாலுக்கு யுத் சேவா பதக்கமும் வழங்கப்பட உள்ளது.