×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அயோத்தி வழக்கு தீர்ப்பையடுத்து உலக அளவில் ட்ரெண்ட் ஆன டாப் 5 ட்ரெண்டிங்!

ayodhya judgement top 5 treanding

Advertisement


அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா உள்ளிட்ட 3 அமைப்புகள் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அயோத்தி வழக்கின் தீர்ப்புகள் ட்விட்டரில் உலக அளவில் டாப் 5 இடங்களில் ட்ரெண்டாகியுள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி நிலபரப்பு வழக்கில் கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்று  தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் அரசிற்கு தான் சொந்தமானது எனவும், 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் மத்திய, உத்தரப் பிரதேச மாநில அரசுகள் 5 ஏக்கர் இடத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

அயோத்தியில் 3மாதத்தில் ராமர் கோவில் கட்டும் அமைப்பை தயாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதற்கான அறக்கட்டளை உருவாக்கி நிலத்தில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடரலாம் என தெரிவித்தது.இந்நிலையில், அயோத்தி வழக்கு தொடர்பான ஹேஷ்டேக்குகள் உலக அளவில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. முதல் இடத்தில் #AYODHYAVERDICT, இரண்டாம் இடத்தில் #RamMandir, மூன்றாம் இடத்தில் #AyodhyaJudgment, நான்காம் இடத்தில் #JaiShriRam, 5ஆம் இடத்தில் #AyodhyaCase ஆகிய ஹேஷ்டேக்குகள் உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளன.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ayodhya judgement #Trending
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story