குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள்.. கிளம்பிய. சர்ச்சை.! மன்னிப்புக் கேட்ட நடிகர் பாக்கியராஜ்.!
குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள்.. கிளம்பிய. சர்ச்சை! மன்னிப்புக் கேட்ட நடிகர் பாக்கியராஜ்!!
சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் "பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022" என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அங்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட, திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் அதனை பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து நடிகர் பாக்யராஜ் சிறப்புரையாற்றினார்.
அப்பொழுது அவர், பிரதமரின் திட்டங்கள் குறித்த இந்த புத்தகத்தை பெறுவதை நான் பாக்கியமாக கருதுகிறேன். பிரதமரை வெளிநாடு செல்கிறார் என குறைக்கூறி கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அது அவர் நாட்டிற்காக எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார் என்பதைக் காட்டுகிறது. மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள். இந்தியாவிற்கு மோடி போன்றவர்கள் தேவை" என்று கூறியுள்ளார்.
குறைபிரசவம் என நடிகர் பாக்யராஜ் கூறியது மாற்றுத்திறனாளிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்தது. இந்நிலையில் நடிகர் பாக்யராஜ் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நான் கூறியது மாற்றுத்திறனாளிகளை அல்ல. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனது கருத்தை யாரையாவது புண்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.