×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முன்னாள் மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து கற்பழித்த எய்ட்ஸ் பாதித்த கணவன்.!

முன்னாள் மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து கற்பழித்த எய்ட்ஸ் பாதித்த கணவன்.!

Advertisement

விவாகரத்து செய்த முன்னாள் மனைவியை நேரில் சந்தித்து, எய்ட்ஸ் பாதித்த கணவன் திட்டமிட்டு பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தவருக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், ஓட்டுனருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருந்ததை தெரிவிக்காமல் திருமணம் நடந்துள்ளது. கணவருக்கு எய்ட்ஸ் இருப்பதை உறுதி செய்த பெண்மணி, அதுகுறித்து கேட்கையில் முதல் மனைவியிடம் இருந்து எய்ட்ஸ் வந்தது என்று தெரிவித்துள்ளார். 

குடும்ப சூழ்நிலை காரணமாக பெண்மணி தனது கணவருடன் வசித்து வந்த நிலையில், நாட்கள் செல்லச்செல்ல ஓட்டுனருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும், அவர் பல பெண்களை நயவஞ்சகத்துடன் ஏமாற்றி இருந்ததும் அம்பலமானது. இதனால் 28 வயது இளம்பெண் கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு செல்ல, கடந்த 6 வருடத்திற்கு முன்னதாகவே இருவரும் விவாகரத்து செய்துள்ளனர். 

இந்த நிலையில், சமீபத்தில் முன்னாள் மனைவியை சந்தித்து பேசிய ஓட்டுநர், இனி தவறு செய்ய மாட்டேன். என்னுடன் சேர்ந்து வாழ் என்று கேட்டுள்ளார். இதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவிக்கவே, குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்துகொடுத்து முன்னாள் மனைவியை எய்ட்ஸ் பாதித்த கணவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி, முன்னாள் கணவரின் மீது பனசங்கரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், தனக்கும் எய்ட்ஸ் பரவிவிட்டதா? என மருத்துவ பரிசோதனையும் செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

செய்தியின் அடிப்படையில் வைத்துக்கொண்டாலும், கணவருக்கு தற்போது 30 முதல் 36 வயது தான் ஆகலாம். அவர்கள் விவாகரத்து பெறும் போது இளம் ஜோடியாக இருந்திருப்பார்கள். ஆணின் ஒழுக்கமின்மை எப்படியெல்லாம் வாழ்க்கையில் மாற்றங்களை அளிக்கும் என்பதற்கு இந்த சம்பவமும் ஓர் சாட்சியாக அமைந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bangalore #karnataka #Banashankari #Rapped #police #AIDS #Husband #Wife
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story