×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விருந்தில் தகராறு.. வாலிபரை அடித்தே கொலை செய்த 5 திருநங்கைகள்.!

விருந்தில் தகராறு.. வாலிபரை அடித்தே கொலை செய்த 5 திருநங்கைகள்.!

Advertisement

வாலிபரை விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்த திருநங்கைகள், திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வாலிபரை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், ராம்நகர் மாவட்டம் சென்னப்பபாட்டனா, லலாஹட்டி கிராமத்தில் 5 திருநங்கைகள் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் திருநங்கைகள் தங்களின் வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். 

இந்த விருந்து நிகழ்ச்சியில் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் என்ற வாலிபரும் கலந்துகொண்டுள்ளார். விருந்தில் வைத்து திருநங்கைகளுக்கும் - ஆனந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தை திருநங்கைகள் 5 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கவே, ஆனந்த் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சென்னப்பபாட்டனா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bangalore #India #Rama Nagar #Transgender #police #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story