×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மர்மமான முறையில் ஒரே இரவில் காணாமல் போன 100 வருட பழமையான ஆலமரம்

Banyan tree axed in a night

Advertisement

பெங்களூரில் ஒயிட்பீல்டு பகுதியில் இருந்த 100 வருட பழமையான ஆலமரம் ஒன்று இரவோடு இரவாக வெட்டப்பட்டு விட்டதாக அந்த பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பெங்களூரின் ஒயிட்பீல்டு பகுதியில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் பல பழமையான ஆல மரங்கள் உள்ளன. இவற்றில் 100 வருட  வருடம் பழமையான ஆலமரம் ஒன்று கடந்த திங்கட்கிழமை இரவு திடீரென மாயமாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலையில் எழுந்து பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு ஆலமரம் காணாமல் போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் ஒயிட்பீல்டு காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இந்த மரத்தை வெட்டிய மர்ம நபர் யாராக இருக்கக்கூடும் என்பது குறித்து அந்த பகுதியில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது.

ஒரு சிலர் மரத்தை வேண்டுமென்றே யாரோ வெட்டி இருக்கலாம் என்றும் வேறு சிலர் அரசின் வனத்துறை அதிகாரிகள் இதனை வெட்டி இருக்கலாம் என்றும் இன்னும் சிலர் அருகில் கடை வைத்திருக்கும் கடைக்காரர் வெட்டி இருக்கலாமோ அல்லது இடத்தை ஆக்கிரமிப்பதற்காக வேறு யாராவது வெட்டி இருக்கலாமோ என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் அப்பகுதி மக்களுக்கு எழுந்துள்ளது.

எனவே வரும் காலங்களில் இப்படி எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமலும், எஞ்சியிருக்கும் மரங்களையாவது காப்பாற்றியாக வேண்டும் என்ற நோக்கத்தில் அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bangalore #banyan tree #Whitefield
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story