ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஒரு பிச்சைக்கார மூதாட்டி கொடுத்த நண்கொடை எவ்வளவு தெரியுமா?
Beggar lady donated 6.6 lakhs
காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் அரங்கேறிய தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த 40க்கும் மேற்பட்ட CRPF ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல தொழிலதிபர்கள் தங்களால் முயன்ற தொகையை நண்கொடையாக அளித்து வருகின்றனர்.
இவர்கள் எல்லாம் நன்கொடை கொடுப்பது என்பது வழக்கமான ஒன்று தான். இதில் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அனைவரும் ஆச்சர்யபடும் அளவிற்கு வியப்பான செயல் ஒன்றை செய்துள்ளார் ராஜஸ்தானை சேர்ந்த நந்தினி சர்மா என்ற பிச்சைக்கார மூதாட்டி.
இவர் கடந்த 7 ஆண்டுகளாக பிச்சை எடுத்து சேமித்த 6.6 லட்சம் ரூபாயை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார்.
6 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நந்தினி சர்மா பல வருடங்களாக அஜ்மர் மாவட்டம் பஜ்ரங்கார் பகுதியில் உள்ள ஆம்பே மாதா கோயில் வாசலில் பிச்சை எடுத்துள்ளார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள மருந்து கடை உரிமையாளரின் உதவியுடன் தான் பிச்சை எடுக்கும் பணத்தை ஒரு வங்கி கணக்கில் சேமித்து வைத்துள்ளார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த சர்மா, தான் சேமித்து வைத்துள்ள 6.6 லட்சம் பணத்தை எதாவது நல்ல கரியத்திற்கு செலவழிக்குமாறு கூறியுள்ளார். அதன் பேரில் அவரது ஆசையை நிறைவேற்றும் வண்ணம் அவரது அந்த முழு தொகையையும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நன்கொடையாக ராஜஸ்தான் முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.