மறக்க முடியுமா? 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த போபால் விஷவாயுக்கசிவு.. 1000+ உயிர்கள் காவு வாங்கிய துயரம்.!
மறக்க முடியுமா? 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த போபால் விஷவாயுக்கசிவு.. 1000+ உயிர்கள் காவு வாங்கிய துயரம்.!
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் ஒரேநாளில் இரவில் நடந்த கொடுமையான சம்பவம் இன்றளவும் பலரையும் மனதளவில் பதறவைக்கிறது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால், யூனியன் கார்பைட் இந்தியா நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி நிறுவனத்தில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விஷவாயு கசிவுக்கு, 2ம் தேதி இரவில் தொடங்கி, 3ம் தேதிக்குள் ஒரேநாளில் 2,259 பேரை கொன்றது.
5 இலட்சம் பேர் பாதிப்பு
சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உடல்நல பாதிப்புகளை எதிர்கொண்டனர். சர்வதேச அளவில் மிகப்பெரிய தொழிற்சாலை அழிவுகளில் முக்கிய இடத்தை பெற்ற போபால் விஷவாயு கசிவு, மெத்தைல் ஐசோசயனைட் எனப்படும் வாயு கசிந்து மரணத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: காதலியை சுட்டுக்கொன்று கடைசி நேரத்தில் மனம் மாறிய காதலன்; பறிபோன உயிர்., பரிதவிப்பில் குடும்பம்.!
விழித்தால் வாழ்வு
இந்த சம்பவம் நடைபெற்று முடிந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றளவும் மக்கள் விஷவாயு கசிவு தொடர்பாக பெரும் அச்சத்துடன் இருந்தாலும், மறுநாள் எழுந்தால் நான் சாகவில்லை என்ற எண்ணத்தில் வாழ்க்கையை நகர்த்தி வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: திரைப்பட பாணியில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்த காவல்துறை; பதறவைக்கும் காட்சிகள்.!