ரூ.1,700 கோடிப்பு.. கட்டுமான பணியின்போதே நொடியில் இடிந்து விழுந்த பாலம்; பீகாரில் பகீர் சம்பவம்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!
ரூ.1,700 கோடிப்பு.. கட்டுமான பணியின்போதே நொடியில் இடிந்து விழுந்த பாலம்; பீகாரில் பகீர் சம்பவம்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!
அரசின் சார்பில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வந்த பாலம் இரண்டாவது முறையாக இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக வேலை நடைபெறும்போது பாலம் விபத்து நடக்கவில்லை.
பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் பகுதியில், கங்கை ஆற்றின் நடுவே பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் தற்போது சரிந்து விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
கங்கை ஆற்றை கடக்கும் வகையில், பீகார் மாநில அரசு சார்பில் அமைக்கப்படும் பாலம் இரண்டாவது முறையாக உடைந்து விழுவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். பாலம் கட்டுவதற்கு ரூ.1,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாகல்பூரில் Aguwani-Sultanganj பகுதிகளை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்ட நிலையில், அது இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெறுவதாக அத்தொகுதியின் எம்.எல்.ஏ லலித் நாராயண் மண்டல் தெரிவித்துள்ளார்.