குடிகாரப்பெயலெல்லாம் மகா பாவிங்க.. அவங்க இந்தியனே இல்லை - முதல்வர் காரசார பேச்சு..!
குடிகாரப்பெயலெல்லாம் மகா பாவிங்க.. அவங்க இந்தியனே இல்லை - முதல்வர் காரசார பேச்சு..!
பீகாரின் முதல்வர் நிதிஷ்குமார் சட்டசபையில், "மகாத்மா காந்தி மது அருந்தக் கூடாது என்பதனை தனது வாழ்நாள் முழுவதும் கூறியதாகவும், இந்தியாவில் மகாத்மா காந்தியின் இந்த கொள்கையினை உணராதவர்கள் யாரும் நிச்சயம் இந்தியர்களாக இருக்க முடியாது" என கூறியுள்ளார்.
மது தனது உடல் நலத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், தனது குடும்பத்தையும் முழுமையாக பாதிக்கிறது. இதனை உணராத குடிகாரன்கள் அதனைத் தேடி அலைந்து வருகின்றனர். இதனால் அவர்களின் வாழ்நாள் மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல், அவர்களை சார்ந்துள்ள குடும்பத்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாக்குகிறது. தனது சுய இன்பத்திற்காக போதையில் திரியும் நபர்கள், அவர்களின் குடும்பத்தின் நிலையை எண்ணிப்பார்க்காமல் செயல்படுவது தொடர்கதையாகியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், "மகாத்மா காந்தி மது அருந்த கூடாது என்பதனை தனது வாழ்நாள் முழுவதும் கடை பிடித்துள்ளார். மேலும், மற்றவர்களுக்கும் அதனை வலியுறுத்தியுள்ளார். மகாத்மா காந்தியின் இந்த கொள்கையை உணராத யாரும் இந்தியர்களாக நிச்சயம் இருக்க முடியாது. மது குடிப்பது பாவம் செய்வதற்கு சமமாகும். மது குடிப்பவர்களை நான் மகா பாவிகள் என்றே கூறுவேன்" என சட்டசபையில் பேசும் போது கூறியுள்ளார்.
அத்துடன், "மது குடித்து உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு சில அரசுகள் உதவி செய்து வருகின்றன. இருப்பினும் அத்தகைய உதவி எதையும் நமது அரசு செய்வது இல்லை. பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதால், கிட்டத்தட்ட ஒரு கோடியே 64 லட்சம் பேர் மது அருந்துவதை கைவிட்டுள்ளனர். இதனால் மேலும், பிகாரில் மதுவிலக்கு கடுமையாக்கப்படும்.
இதனைக்கண்ட மற்ற மாநிலங்கள் அனைத்தும் ஆச்சரியப்படுகின்றன. மேலும் தனது மாநிலங்களிலுள்ள குழுக்களை அனுப்பி பிகாரில் எவ்வாறு மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது என்பதனை ஆய்வு செய்து வருகின்றனர். அந்த அளவுக்கு மதுவிலக்கு மிகவும் சிறப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது" என கூறியுள்ளார்.