இரயில் பெட்டிக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்.. பீகாரில் பெரும் பதற்றம்.. இரயிலை கவிழ்க்க சதி.. பகீர் வீடியோ.!
இரயில் பெட்டிக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்.. பீகாரில் பெரும் பதற்றம்.. இரயிலை கவிழ்க்க சதி.. பகீர் வீடியோ.!
பீகார் மாநிலத்தில் உள்ள இளைஞர்கள், கடந்த 2019 ஆம் வருடம் இரயில்வே Non Technical வேலைக்கு நடந்த தேர்வு முடிவுகளை மத்திய இரயில்வே துறை வெளியிட வேண்டும் என கூறி போராட்டம் நடத்தி வந்தனர். முதலில் அறவழியில் தொடர்ந்த போராட்டம், இரயில் சிறைபிடிப்பு சம்பவத்திற்கு சென்றதால் பெரும் சர்ச்சை உருவானது.
பாட்னா இரயில் நிலையத்தில் சுமார் 5 மணிநேரத்திற்கு மேலாக இரயில்களை சிறைபிடித்து போராட்டம் செய்தவர்கள் குண்டுக்கட்டாக தூக்கி அகற்றப்பட்ட நிலையில், தற்போது வன்முறை சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள கயா இரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்கள், திடீரென காவல் துறையினரை நோக்கி கற்களை வீசி எரிந்து தாக்குதல் நடத்தினர்.
மேலும், தண்டவாளத்தில் உள்ள கற்களை எடுத்து, இரயில் தண்டவாளத்தை பிடிக்க உதவும் அமைப்புகளை தட்டி இரயில் செல்ல இயலாத வகையில் முடக்கிப்போட்டனர். மேலும், அங்கு நின்று கொண்டு இருந்த இரயில் பெட்டிகளுக்கு தீ வைத்தும் கொளுத்தியுள்ளனர். சம்பவ இடத்தில் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் போராட்டக்காரர்களை ஒடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.