ஊசியில் மருந்தே இல்லாமல் கொரோனா தடுப்பூசி போட்ட செவிலியர்!! வைரலாகும் வீடியோ..
ஊசியில் மருந்தே இல்லாமல் செவிலியர் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வ
ஊசியில் மருந்தே இல்லாமல் செவிலியர் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்தியாவில் பரவிவரும் கொரோனா 2 வது அலை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா 3 வது அலை விரைவில் தாக்கலாம் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் மக்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவேடும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்திவருகிறது.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் நடந்த சம்பவம் பெரும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு நபர் ஒருவர் கடந்த 21 ஆம் தேதி தடுப்பூசி போடுவதற்காக சென்றுள்ளார். அந்த தடுப்பூசி மையத்தில் கூட்டம் சற்று அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தடுப்பூசி போடும் பணியை செய்துகொண்டிருந்த செவிலியர் ஒருவர், அங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டே, ஊசியை எடுத்து அதில் மருந்தை ஏற்றாமலையே அந்த நபருக்கு தடுப்பூசி போட்டுள்ளார். இந்த காட்சிகளை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுக்க, தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.