சரக்கடிக்க இரயிலை நிறுத்தி சென்ற ஓட்டுனர்.. பீகாரில் சம்பவம்..!
சரக்கடிக்க இரயிலை நிறுத்தி சென்ற ஓட்டுனர்.. பீகாரில் சம்பவம்..!
மது அருந்துவதற்காக உதவி ஓட்டுநர் ரயிலை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலத்தில் உள்ள சமஸ்டிபூரிலிருந்து சஹர்சா பகுதியை நோக்கி இயக்கப்பட வேண்டிய பயணிகள் ரயில், ஒரு மணி நேரத்திற்கும் மேல் புறப்படாமலேயே நின்றுள்ளது.
இதனால் உள்ளிருந்த பயணிகள் அனைவரும் அவதிக்குள்ளாகிய நிலையில், ஏன் இவ்வளவு தாமதமாகியும் ரயில் புறப்படவில்லை? என்று கேட்டுள்ளனர்.
அப்போது அந்த ரயிலின் உதவி ஓட்டுநர் கரன்வீர் யாதவ், ரயிலில் இருந்து மது அருந்துவதற்காக கீழே இறங்கி சென்ற நிலையில், அவர் வராத காரணத்தால் ரயில் இன்னும் புறப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
பின் இந்த விஷயம் தொடர்பாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிய வர, அவர்கள் மது அருந்தி விட்டு வந்த ரயில்வே ஓட்டுனரை கைது செய்தனர். மேலும், ஒரு மணி நேரம் தாமதமான ரயில் பின்னர் மற்றொரு உதவி ஓட்டுநரை வைத்து இயக்கப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக ரயில்வே மேலாளர் கூறுகையில், ரயில்வே ஓட்டுனரிடம் விசாரணை நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.