எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப் போகும் பாஜக எம்எல்ஏ.! என்ன காரணம்.?
பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்
பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இந்தநிலையில், பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளியை, மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சமாதானம் செய்துள்ளார்.
பாலியல் வழக்கில் சிக்கியுள்ள கர்நாடக பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி கட்சி மீது கடும் அதிருப்தியில் உள்ளார். இதனால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். விரைவில் தனது முடிவை அறிவிக்க உள்ளதாக நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், மும்பையில் முகாமிட்டுள்ள, அவர், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, முதல்வர் எடியூரப்பா மற்றும் டில்லி தலைவர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை ராஜினாமா முடிவு எடுக்க வேண்டாம் என்று பட்னாவிஸ் கேட்டுகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.