மத்தியில் வெற்றிபெற்றாலும் தமிழகத்தில் பாஜகவின் நிலை என்ன தெரியுமா? இதோ!
BJP status in tamilnadu election 2019
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி மத்தியில் ஆளும் பாஜக கட்சி இந்த முறையும் அதிக இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க தயாராகிவருகிறது. காங்கிரஸ் கட்சி பின்தங்கிய நிலையிலையே உள்ளது.
தற்போதைய நிலவரப்படி பாஜக 340 தொகுதிகளுக்கு மேலும், காங்கிரஸ் கட்சி ஏறக்குறைய 90 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தேனி நாடாளுமன்ற தொகுதியை தவிர அனைத்து இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி காட்சிகள் முன்னிலையில் உள்ளது.
அதிக - பாஜக கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் பெரும் தோல்வியையே சந்தித்துள்ளது. மத்தியில் கெத்து காட்டும் பாஜக தமிழகத்தில் போட்டியிட ஐந்து இடத்திலும் பின்தங்கிய நிலையிலையே உள்ளது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை தூத்துக்குடி தொகுதியில் பின்தங்கிய நிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.