வரலாற்றை புரட்டிப்போட்ட வெற்றி..! சரித்திர சாதனை படைத்த யோகி ஆதித்யநாத்.! கொண்டாட்டத்தில் பாஜக.!
வரலாற்றை புரட்டிப்போட்ட வெற்றி..! சரித்திர சாதனை படைத்த யோகி ஆதித்யநாத்.! கொண்டாட்டத்தில் பாஜக.!
உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த முதலே ஆளும் பா.ஜ.க. மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், கோரக்பூர் நகர தொகுதியில் 1,65,499 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சுபாவதி சுக்லா 62,109 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார்.
உத்தரப் பிரதேசத்துக்கு பா.ஜ.க இதுவரை நான்கு முதல்வர்களைக் கொடுத்திருக்கிறது. மற்ற மூவர் மீண்டும் தேர்தலை சந்தித்தபோது அவர்கள் ஆட்சியை இழந்தனர். ஆனால், யோகி ஆதித்யநாத் மட்டுமே மீண்டும் இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்த ஒரு முதல்வர், மீண்டும் ஆட்சிக்கு வருவது உத்தரப் பிரதேசத்தில் இதுவே முதல் முறை. கடந்த 15 ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்து முதல்வர் நாற்காலியில் அமரும் முதல் நபர், யோகி ஆதித்யநாத்.