கேரளா விமான விபத்து நடந்தது எப்படி? மொத்தமும் தெரிந்துவிடும்! கைப்பற்றப்பட்ட கருப்பு பெட்டி!
Black box recovery in flight accident
நேற்று பிற்பகல் 3 மணிக்கு துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் ஒடு பாதையிலிருந்து விலகியதால் விபத்துக்குள்ளாகி விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்து விழுந்துள்ளது. இந்த விமான விபத்தில் விமானி உள்பட 18 பேர் பலி ஆனார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விமான விபத்தில் டிஜிட்டல் பிளைட் டேட்டா ரெக்கார்டர் மற்றும் வாய்ஸ் ரெக்கார்டர் என்று சொல்லப்படும் முக்கிய கருவிகள் ( கருப்பு பெட்டி ) கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலமாக விமானம் எந்த உயரத்தில் பறந்து கொண்டிருந்தது, விமானத்தின் நிலை, அதன் வேகம், விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல்கள் உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த விசயங்கள் கருப்பு பெட்டியில் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.
இதனை மீட்டு ஆய்வு செய்த பின்னரே விமான விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் குறித்து தெரிய வரும். விமான புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைக்கு உதவியாக இந்த கருப்பு பெட்டி இருக்கும். கருப்பு பெட்டி நல்ல நிலமையில் இருப்பதாகவும், எந்த சேதாரமும் இல்லாமல் கிடைத்து விட்டதாகவும் அதனை வெட்டி எடுப்பதற்காக வேலை தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.