ஆற்றில் மிதந்து வரும் உடல்கள்.! சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.! அதிர்ச்சி சம்பவம்..!!
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள சவுதா என்ற கிராமத்தில் கங்கை நதியில் கரையை ஒட்டி ப
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள சவுதா என்ற கிராமத்தில் கங்கை நதியில் கரையை ஒட்டி பல சடலங்கள் மிதந்தது. பல சடலங்கள் மிதந்து வந்ததைப் பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த அரசு அதிகாரிகள் உடல்களை கைபற்றி அடக்கம் செய்தனர்
உடல்கள் அனைத்தும் ஏறக்குறைய 5 முதல் 7 நாட்கள் வரை தண்ணீரில் மிதந்து வந்திருக்க வேண்டும். இவை உத்தரபிரதேச மாநிலம் வாரனாசி போன்ற நகரங்களில் இருந்து வந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய போதிய பண வசதி போன்றவை இல்லாதவர்கள் இவ்வாறு கங்கை நதியில் உடல்களை தூக்கி வீசியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கங்கை நதியில் பல சடலங்கள் மிதந்து வந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் கங்கை நதியில் வலைகளை அதிகாரிகள் அமைத்துள்ளனர். கங்கை ஆற்றில் பல சடலங்கள் மிதந்து வந்த நிலையில் தற்போது யமுனை ஆற்றிலும் ஏராளமான உடல்கள் மிதப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.