திடீரென நீதிமன்றத்தில் வெடித்த வெடிகுண்டு! காயமடைந்த வழக்கறிஞர்கள்!
Bomb blast in court
லக்னோ நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் 2 வழக்கறிஞர்கள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் பலர் அலறல் சத்ததுடன் அங்கும் இங்கும் ஓடினர். குண்டு வெடிப்பில் வழக்கறிஞர்கள் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
லக்னோ நீதிமன்ற வளாகத்தில் இன்று திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது திடீரென நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் 2 வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மேலும் நீதிமன்ற வளாகத்தில் வெடிக்காத 3 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். வெடிகுண்டு வீசப்பட்ட பகுதியில் ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு வழக்கறிஞர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வெடிகுண்டு வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.