மரித்துப்போன மனிதாபிமானம்.. பட்டப்பகலில் இளைஞர் பொதுமக்கள் முன்னிலையில் கொலை..!
மரித்துப்போன மனிதாபிமானம்.. பட்டப்பகலில் இளைஞர் பொதுமக்கள் முன்னிலையில் கொலை..!
இளைஞர் ஒருவரை பட்டப்பகலில் மர்ம கும்பல் சரமாரியாக தாக்கி, கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் இன்று காலை 25 வயதுடைய மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்குப் பின்னால் நடந்து வந்த ஒரு நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளைஞரின் இடுப்புப் பகுதியில் குத்தியுள்ளார்.
இதனால் கீழே சரிந்து விழுந்த அவரை, அருகிலிருந்து ஓடி வந்த இரண்டு நபர்கள் சூழ்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அத்துடன் அவரை கத்தியால் பல இடங்களில் குத்தியதால், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில், அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சொத்து தகராறு காரணமாக இளைஞரின் உறவினர்களே அவரை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் கொலை செய்தவர்களை தீவிரமாக போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையடுத்து வீடியோவைக்கண்ட நெட்டிசன்கள் பலரும், ஏராளமான வாகனங்கள் சென்ற போதிலும், அருகில் பொதுமக்கள் இருந்த நிலையிலும் யாரும் அவரை காப்பாற்ற முன்வராதது மனிதாபிமானமற்ற செயலாக உள்ளது என பதிவிட்டு வருகின்றனர்.