வீடியோ: வெறும் கைகளால் நாகப்பாம்பை பிடித்த வனத்துறை ஊழியர்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
Brave man catching cobra without using any equipment video goes viral
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்கு கரணம் பாம்பின் கொடிய விஷமும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்கிற பயமும்தான் காரணம். எப்பேர்ப்பட்ட வீரனாக இருந்தாலும் பாம்பை பார்த்ததும் சில நிமிடம் யோசிக்கத்தான் செய்வான்.
இந்நிலையில், வீட்டின் கூரைமீது பதுங்கியிருந்த நாக பாம்பு ஒன்றை வனத்துறை ஊழியர் ஒருவர் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, சிறு குச்சியின் உதவியுடன் வெறும் கைகளால் பிடித்து பைக்குள் போடும் காட்சி பார்ப்போரை சிலிர்க்கவைக்கிறது.
இந்திய வனத்துறை அதிகாரிங்களில் ஒருவரான சைலேந்திர சிங் இந்த காட்சியை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2 நிமிடம் 13 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் வனத்துறை ஊழியர் பாம்பை லாவகமாக பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதோ அந்த வீடியோ.